
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது வரும் நாட்களில்ஏறக்கூடாது எனத்தடை விதித்து தீட்சிதர்கள் வைத்துள்ள பதாகைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் புகழ்பெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழா சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வாகநாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆனித்திருமஞ்சன திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா நாட்களில் நடராஜர் கோவிலில் மூலவராக இருக்கின்ற நடராஜனே தேருக்கு வந்து விழாவில் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய யாருக்கும் நான்கு நாட்களுக்கு அனுமதி இல்லை எனத்தீட்சிதர்கள் திடீரென அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தனர். பக்தர்கள் சிலர் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் அறிவிப்பு பதாகையை அகற்ற வலியுறுத்தி அறநிலையத்துறை அதிகாரி சரண்யா சென்றபோது தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)