sathyaraj

அமைப்பாய் திரள்வோம் என்கிற புத்தகத்தை தொல். திருமாவளவன் எழுத, அதை நக்கீரன் பப்ளிகேஷன் வெளியிட்டது. இந்த புத்தகத்திற்கான விமர்சன கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு புத்தகத்தின் மீதான கலந்துரையாடல்களை நடத்தினர். அப்போது நடிகர் சத்யராஜும் அதில் கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

சத்யராஜ், புத்தகத்தில் இருக்கும் முக்கிய கருத்துக்களை விவரித்துக்கொண்டிருந்தவர். பின்னர், திருமாவளவனுக்கு ஒய்வு வேண்டும். ஒரு தலைவனுக்கு கண்டிப்பாக ஒய்வு வேண்டும். ஆதலால் அவரைசமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டும் கூப்பிடுங்கள். தயவு செய்து, காது குத்து, பெண் சடங்கு, திருமண நிகழ்ச்சி, பிறந்தநாள் நிகழ்ச்சி என அழைத்து திருமாவளவன் எங்கள் வீட்டிற்கு வந்தார் என்று பீத்தி கொள்ளாதீர்கள். தயவு செய்து இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்காதீர்கள்.

Advertisment

ஒரு தலைவருக்கு சரியான ஒய்வு, உடல் ஆரோக்கியம் வேண்டும். அவர் ஒரு இயக்கத்தின் தலைவர், அவரை இதுபோன்ற தனிநபர் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் அவருடைய நேரம் அனைத்தும் அதற்கே செலவழிந்துவிடும். அவர் என்ன 5 நிமிடம் நிகழ்ச்சிகளில் தலையை காட்டவா இருக்கிறார். உங்களை எல்லாம் தலைவராக்கத்தான் இருக்கிறார் என்று அந்த நிகழ்ச்சியில் பேசினார்.