Skip to main content

வதந்தியை நம்ப வேண்டாம் - நடிகர் சரத்பாபு குடும்பத்தினர் வேண்டுகோள்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

'Don't believe that information'-Actor Sarathbabu's family pleads

 

நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வெளியான தகவல் போலியானது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு சரத்பாபு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘முள்ளும் மலரும்’, 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.  முள்ளும் மலரும் படத்தில் 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' என்ற இவர் நடித்த பாடல் மிகவும் பிரபலமானது. இதனிடையே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

 

கடந்த சில தினங்கள் முன்பு சரத்பாபு (71) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஹைதராபாத்தில் சிகிச்சை பலனின்றி சரத்பாபு உயிரிழந்ததாகத் தகவல் ஒன்று வெளியானது. இந்நிலையில் இந்த தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த தகவல் ஒரு வதந்தி. யாரும் நம்ப வேண்டாம். ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர். உடல்நிலை தேறி வருகிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆடி கிருத்திகை; பழனி கோயில் நிர்வாகம் எச்சரிக்கை

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Audi Concept Palani temple administration alert

 

இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காகப் பல்வேறு முன் ஏற்பாடுகள் பழனி கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை அன்று அர்ச்சனை செய்வதற்குத் தொலைப்பேசி வாயிலாகப் பதிவு செய்யலாம் என வாட்ஸ்அப் வழியே பரவும் பொய்யான தகவல்களை நம்பி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனப் பழனி கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “0444 - 2890021 என்ற எண்ணினை தொடர்பு கொண்டால் பழனி முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர், நட்சத்திரம் கேட்பார் அதைச் சொன்னவுடன் ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படுவதாகத் தெரிவித்துப் பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" எனப் பொய்யான தகவல்கள் வாட்ஸ்அப் வழியாகப் பரப்பப்பட்டு வருவது இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்குத் தெரியவந்தது.

 

அவ்வாறு பொய்யான தகவல்களை உருவாக்கியவர்கள் மீது காவல்துறை, சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இதுபோன்ற தொலைப்பேசி எண் மற்றும் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாகத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

சரத்பாபுவின் கடைசி ஆசை; நிறைவேற்றிக் காட்டிய தங்கை

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

Sarathbabupu's last wish; Younger sister who fulfilled

 

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'பட்டினப் பிரவேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். குறிப்பாக முள்ளும் மலரும் படத்தில் இவர் நடித்த 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' பாடல் மிகவும் பிரபலமானது. தொடர்ந்து அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

 

சமீபத்தில் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உடல்நலக்குறைவால் சரத்பாபு காலமானார். அவருக்கு வயது 71. இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினிகாந்த், ராதிகா, சரத்குமார், சுஹாசினி, சுரேஷ் சந்த்ரா உள்ளிட்ட பிரபலங்கள் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 

வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் திரைத்துறையில் தமிழ்நாடு தான் தமக்கு வாழ்வில் முக்கியமான இடமளித்ததால் தனது உடலை தமிழ்நாட்டில் தான் தகனம் செய்ய வேண்டும் என கடைசி ஆசையாக சரத்பாபு அவரது தங்கை சரிதாவிடம் தெரிவித்ததாகவும், அவரின் ஆசைப்படியே அவரது உடலை இத்தனை கிலோமீட்டர்கள் கொண்டு வந்து தமிழ்நாட்டில் இறுதி சடங்கு நடத்தினோம்  என்று அவரது தங்கை சரிதா தெரிவித்துள்ளார். அதன்படி சரத்பாபுவின் உடல் தி.நகரிலிருந்து கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பின்பு கிண்டி மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.