Advertisment

திமுக உடன் பிறப்புகளே, மனமுடையாதீர்! பொறுமையுடன் காத்திருங்கள் கலைஞரைச் சந்திக்க! - கி.வீரமணி

vee sss

திமுக உடன் பிறப்புகளே, மனமுடையாதீர்! பொறுமையுடன் காத்திருங்கள் கலைஞரைச் சந்திக்க என திராவிடர் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்பே என்று வாஞ்சையுடன் அழைக்கும் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் முழுநலம் பெற்று வெளிவருவதற்கு சில நாள் பிடிக்கலாம்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

நாளும் நலம் பெற்று, பலம் பெற்று வருகிறார். அவர் அடித்தட்டு மக்கள் உள்பட அனைவரது உள்ளம் கவர்ந்த தலைவர். அவரது முதுமை வயது, தொற்றுநோய் காரணமாகவே காவேரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் உடல்நலம் தேறி நாளும் முன்னேறி வருகிறார்.

இதற்கிடையில் இந்த அதிர்ச்சி, மனவேதனை, மன அழுத்தத்தில் கழக உடன்பிறப்புகள் சிலர் மறைவுற்றார்கள் என்பதை அறிய இரத்தக் கண்ணீர் வருகிறது. இம்மாதிரி முயற்சிகளில் அருள்கூர்ந்து ஈடுபடாதீர்கள்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோளை ஏற்று, எவரும் அதிர்ச்சியோ, தற்கொலை முயற்சியிலோ ஈடுபடாமல் பொறுமையுடன் காத்திருங்கள் கலைஞரைச் சந்திக்க. கவலை வேண்டாம் - காரணம், காலத்தை வென்ற தலைவர் அவர்! எந்த எதிர்நீச்சலிலும் வெற்றி பெற்ற ஏந்தல் அவர்!

kalaignar K.Veeramani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe