Advertisment

“இதில் பிடிவாதம் பண்ணக்கூடாது; பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு” - சீமான் பேட்டி

'Don't be stubborn; Who is responsible if children are harmed'-Seeman interview

ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கும், அதேபோன்று ஐந்தாம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திட்டமிட்டவாறே திறக்கப்படும். பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருந்தால் முதல்வர் அதனை அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,''ஜூன் மாதம் வந்தும் கூட வெயிலின் தாக்கம் குறையவில்லை. இங்கு பல பள்ளிக்கூடங்கள் ஆஸ்பெட்டாஸ் சீட்டில் தான் இயங்குகிறது. பள்ளிகளில் மின்விசிறி, ஏசி வசதிகள் எல்லாம் இல்லை. பெரிய தனியார் பள்ளிகளில் வேண்டுமானால் குளிரூட்டிகள் இருக்கலாம். அதனால் ஜூன் 1 ஆம் தேதி திறப்பதற்கு பதிலாக கொஞ்சம் தள்ளி வெப்பம் தணிந்த பிறகு பள்ளிகளை திறப்பது நல்லது.

Advertisment

இல்லையென்றால் சின்ன குழந்தைகளுக்கு வெப்பத்தில் கொப்புளங்கள் வந்து அம்மை நோய் வந்து பாதிப்பிற்கு ஆளாவார்கள். ஆனால், தம்பி அன்பில் மகேஸ்ஜூன் ஒன்றாம் தேதி தான் பள்ளிகளை திறப்போம் என்றும், புத்தகங்கள் கொடுப்போம் என்றெல்லாம் சொல்கிறார். அப்படி எல்லாம் பிடிவாதம் பண்ணக்கூடாது. நீங்கள் எப்பொழுதுமே மக்கள் நலனிலிருந்து தான் சிந்திக்க வேண்டும். எங்களுக்கு ஒன்றும் பள்ளிக்கூடங்களை நீங்கள் தாமதமாக திறக்க வேண்டும் என்று எண்ணம் அல்ல. பிரச்சனை வந்தால் பிறகு நீங்கள் தான் எதிர்கொள்ள வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு வெயிலின் தாக்கத்தால் நோய்வாய்ப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது. கரோனா நேரத்தில் நீங்கள் பள்ளிகளை மூடினீர்கள் அல்லவா. அதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்'' என்றார்.

education schools seeman ntk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe