Skip to main content

“ரொம்ப அப்டேட் கேட்காதீங்க... தவறான டிசிஷன் எடுக்க வாய்ப்பிருக்கு” - சிம்பு பேச்சு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

 "Don't ask for too many updates...there is a chance of taking a wrong decision" - Simbu speech

 

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடைபெற்றது.

 

இதில் பேசிய நடிகர் சிம்பு, ''ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். படம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது அப்டேட் கேக்குறீங்க. நிறைய அப்டேட்ஸ் வேணும்... அப்டேட்ஸ் வேணும்னு கேட்குறீங்க. உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், ஒரு விஷயத்தை இங்கே ஷேர் பண்ணிக்க விரும்புகிறேன். டைரக்டராக இருக்கட்டும், ஹீரோவாக இருக்கட்டும் அந்த படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு ரொம்ப மெனக்கெட்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் தினமும் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்க என்று சொல்லும் போது ஒரு தவறான டிசிஷன் எடுக்கக் கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது. அதனால் என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய ரிக்வெஸ்ட் என்னவென்றால் உங்களை சந்தோசப்படுத்துவது தான் எங்களுடைய முதல் வேலையே.

 

எனவே, எங்களுக்கு அதற்கான களத்தை கொடுத்தீர்கள் என்றால்தான் நல்ல படங்கள் வரும். அதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் ஒரு ஹீரோவை தூக்கி மேல வைப்பாங்க. ஆனால், நான் என்னுடைய ரசிகர்களை தூக்கி மேல வைக்கணும்னு நினைக்கிறேன். என் படத்துக்கு மட்டும் இல்ல. எல்லா படத்துக்கும் ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க. உங்களுக்கு நல்ல படம் கொடுப்பதற்கு நாங்கள் எல்லோரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது எங்க பத்து தல டைரக்டர் சொல்ல சொன்னாரு. அதனால தான் சொன்னேன்.'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

simbu in Vendhu Thanindhathu Kaadu ott release date announced

 

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான 'வெந்து தணிந்தது காடு' படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெற்றியானதை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கௌதம் மேனனுக்கு பைக்கும், சிம்புவுக்கு காரும், நடிகர் கூல் சுரேஷிற்கு ஐ ஃபோனும் பரிசளித்தார். மேலும் படத்தை பார்த்த திரை பிரபலனங்கள் பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வருகிற 13ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதனை அமேசான் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதனிடையே முன்னதாக இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவித்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

 

 

Next Story

"பெண்ணின் ஏக்கமும் வலியும்..." - சிம்பு பாடல் குறித்து பேசிய சீமான்

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

seeman talks about simbu mallipoo song in vendhu thaninthadu kaadu movie

 

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான 'வெந்து தணிந்தது காடு' படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெற்றியானதை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கௌதம் மேனனுக்கு பைக்கும், சிம்புவுக்கு காரும், நடிகர் கூல் சுரேஷிற்கு ஐ ஃபோனும் பரிசளித்தார். மேலும் படத்தை பார்த்த திரைபிரபலனங்கள் பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.அதே போன்று படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக ‘மல்லிப் பூ’ பாடல் பலரது விருப்பப் பாடலாக மாறியுள்ளது.  

 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெற்றுள்ள 'மல்லிப் பூ' பாடல் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில், ஆருயிர் இளவல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்திருக்கிற 'வெந்து தணிந்தது காடு' படத்தில் பாசத்திற்குரிய அக்கா தாமரை எழுதி பாடகி மதுஸ்ரீ  பாடிய 'மல்லிப் பூ' அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். 

 

கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கிற ஏ.ஆர் ரஹ்மானுக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.