Skip to main content

தங்கதமிழ்செல்வனை கட்சியில் சேர்க்க கூடாது! தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் தீர்மானம்!!

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கொள்கைபரப்பு செயலாளராகவும், டிடிவியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த தங்கதமிழ்செல்வனும், டிடிவி க்கும் இடையே  ஏற்பட்ட  திடீர் மோதலால் தங்கதமிழ்செல்வனை கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து  டிடிவி நீங்கினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. 

 Don't add  the thangatamilselvan to the party! Theni district AIADMK executives


இதனால் பாதிக்கப்பட்ட தங்கதமிழ்செல்வனும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு கட்சியே இல்லை. கூடாரம் எல்லாம்  காலியாகி வருகிறது. அந்த  அளவுக்கு  டிடிவி சரவ அதிகார போக்கை கடைபிடித்து வருகிறார் தற்பொழுது தான் எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை கொஞ்ச நாள் ஓய்வெடுக்க இருக்கிறேன் என மீடியாக்கள் மத்தியில் பரபரப்பாக பேசியும் வருகிறார்.

ஒபிஎஸ்க்கு எதிராக தங்கதமிழ்செல்வனை மீண்டும் கட்சியில் சேர்த்து ஒபிஎஸ்க்கு செக் வைக்கும் முயற்சியில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் எடப்பாடி மகன் பிதின்குமார் மூலமும் மறைமுக பேச்சும் ஒருபுரம் நடந்து வருகிறது. ஆனால் ஒபிஎஸ் மற்றும் அவருடைய  ஆதரவாளர்கள்  எல்லாம் ஒட்டு மொத்தமாகவே தங்கதமிழ்செல்வனை (டிடிஎஸ்) மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என போர்க் கொடி தூக்கி வருகிறார்கள். 

 

 Don't add  the thangatamilselvan to the party! Theni district AIADMK executives


இந்நிலையில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான்  தலைமையிலும். அதுபோல் தேனி மாவட்ட அதிமுக துணை செயலாளர் முருக்கோடை ராமர் முன்னிலையிலும் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பயணியர் விடுதியில் திடீரென தேனி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகரம்,ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அணி செயலாளர்கள் என 60க்கு மேற்பட்டோரை அழைத்து ரகசிய கூட்டம் போட்டிருக்கிறார்கள். இக்கூட்டத்தில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் தான் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் ஏகமனதாகவே  தங்கதமிழ்ச்செல்வனை மீண்டும் கட்சியில் சேர்த்தால் கோஷ்டி பூசலை உருவாக்குவார். அதோடு சாதி அரசியலையும் முன்னிலைபடுத்தி நமக்குள் கருத்து வேறுபாடுகளையும் கொண்டு வந்து விடுவார்.  கட்சி  வளர்ச்சியும் பாதிக்கும் அப்படிபட்ட  தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் சேர்க்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 Don't add  the thangatamilselvan to the party! Theni district AIADMK executives


இதற்கு எம்.பி . ரவீந்திரநாத் குமார் மற்றும் கம்பம் எம்எல்ஏ ஜக்கையனும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இப்படி மாவட்டத்தில் எம்.பி. முதல் பேரூர் பொறுப்பாளர்கள் என ஒட்டுமொத்த பொறுப்பாளர்களும் இந்த தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்து போட்டு மாவட்ட செயலாளர் சையது கான் மற்றும் மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர் ஆகியோரிடம் கொடுத்து இருக்கிறார்கள். 

அதை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் சென்னை சென்று தலைமை கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வரான ஒபிஎஸ் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும்,முதல்வருமான எடப்பாடியை  சந்தித்து தீர்மானம்  நகலை கொடுக்க இருக்கிறார்கள். அதன் மூலம் தங்கதமிழ்செல்வனும் மீண்டும் கட்சியில் சேர வாய்ப்பு  இல்லை. இருந்தாலும் அந்த  தீர்மானத்தை எடப்பாடி தரப்பு  ஏற்றுக் கொள்ளுமா? என்பதை பொருந்திருந்து தான்  பார்க்க முடியும்.

 

 

 

 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.