/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/donkey-milk.jpg)
ஆவின் பாலை விட கழுதை பாலின் விலை தமிழகத்தில் அதிகம். திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், மாவட்டங்களில் கழுதை பால் 50 மில்லி, 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதுவும் கழுதையுடன் வீதியில் நேரடியாக வந்து விற்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீரமங்கலம்,தாளக்குடி, வாளக்கட்டை உள்ளிட்ட பகுதிகளில் கழுதைப்பாலை கூவி, கூவி விலைக்கு விற்பனை செய்து வருகிறார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையம்மாள் என்ற பெண்மணி. ஒரு பெண்கழுதை, குட்டி கழுதை என இரண்டையும் வீதி, வீதியாக அழைத்துச் சென்று பல்வேறு நோய்களை தீர்ப்பதாக கூறி வீடு வீடாகச் சென்று கழுதைப்பாலை விற்பனை செய்து வருகிறார்.
50 மில்லி கழுதைப் பாலை 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். இதனை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரண சக்தி கிடைப்பதுடன், மஞ்சள் காமாலை நோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வராது என கூறுகிறார் பச்சையம்மாள். கடந்த 10 வருடங்களாக விற்பனை செய்து வருவதாகவும் மாவட்டம், மாவட்டமாக சென்று விற்பதாகவும் சொல்கிறார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)