Skip to main content

கணவரின் கண்களைத் தானம் கொடுத்த கர்ப்பிணி மனைவி

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பனின் மகன் முத்துக்கிருஷ்ணன் (36). நெல்லை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து சென்னை வரை செல்கிற விரைவுப் பேருந்தின் ஒட்டுனராகப் பணியாற்றி வருபவர். அவரின் மனைவி சந்திரா இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

 

 

 

இந்தச் சூழலில் வழக்கமாக விரைவுப் பேருந்தை இயக்கிக் கொண்டிருக்கும் முத்துக்கிருஷ்ணன் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து பாபனாசம் நோக்கி விரைவுப் பேருந்தை ஒட்டி வந்திருக்கிறார். அப்போதைய அதிகாலைப் பொழுது அந்தப் பேருந்து மதுரையை அடுத்த மேலூர் பக்கம் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியில் மோதி விபத்திற்குள்ளாகியிருக்கிறது.


 

Pregnant wife who donated her husband's eyes in the nettle


 

விபத்தில் விரைவுப் பேருந்தின் முன் பகுதி பெருத்த சேதமடைந்ததால் முத்துக்கிருஷ்ணன் அதன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே மரணமடைந்த முத்துக்கிருஷ்ணின் இரண்டு கண்களும் உயிர்த் துடிப்பிலிருப்பதையறிந்த மருத்துவர்கள் உடனடியாக அவரது மனைவி சந்திராவைத் தொடர்புகொண்டு முத்துக்கிருஷ்ணனின் இரண்டு கண்களையும் தானமாகக் கேட்டிருக்கிறார்கள். கணவனைப் பறி கொடுத்த சோகத்திற்கிடையே சந்திராவும் அதற்குச் சம்மதிக்க கண்களைத் தானமாகப் பெற்றுக் கொண்டனர்.

 

 

 

ஒரு குடும்பத்தில் யாரேனும் கருவுற்றிருந்தால் அந்தக் குழந்தை பிறக்கும் வரை ஒரு உயிரையோ அல்லது உடல் உறுப்புகளையோ சேதமாக்கமாட்டார்கள் அந்தக் குடும்பத்தினர். தமிழகக் கிராமங்களில் நடைமுறை மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிற இந்த அதீதக் கொள்கையை உடைத்து, அடுத்தவரின் மூலமாகத் தன் கணவனின் கண்கள் ஒளிரட்டும் என்கிற தியாக மனப்பான்மையோடு கணவனைப் பறிகொடுத்த நிலையிலும் தானம் கொடுத்த சந்திரா நிறைமாதக் கர்ப்பிணி. இன்னும் நான்கு தினங்களே பிரசவத்திற்கு உள்ள நிலையில் அடுத்தவர் வாழ்வில் ஒளி விளக்கேற்றி வைத்த அவரின் தானக் கொடை அந்தப் பகுதியினரை நெகிழச் செய்திருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா; உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Manonmaniam Sundaranar University. convocation; Minister of higher education boycott!

திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (03.02.2024) 30 வது பட்டமளிப்பு விழா வ.உ. சிதம்பரனார் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்றார். அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதே சமயம் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை. இதன் மூலம் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழா கடந்த 29 ஆம் தேதி (29.01.2024) நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவிலும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பல் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
A gnashing of teeth affair Court action order

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி, உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் துன்புறுத்தியதாகச் சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக முதலில் சார் ஆட்சியர் விசாரணை, பிறகு ஆட்சியர் விசாரணை என நடந்தது. அதன் பின்னர் அப்போதைய அரசு முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

அதே சமயம் பல்வீர் சிங் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆயுதத்தைப் பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளில் 4 வழக்குகள் பல்வீர்சிங் மீது பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதனையடுத்து அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், காவல் துறையினர் தன் மீது பொய் வழக்கு தாக்கல் செய்து காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட மனுதாரர், கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை வழங்க வேண்டும், விசாரணை அதிகாரி அமுதாவின் அறிக்கையை தன்னிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.01.2024) மீண்டும் விசாரணை வந்தது. அப்போது நீதிபதி இளங்கோவன், அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை பாதிக்கப்பட்ட அருண்குமாருக்கு வழங்க உத்தரவிட்டார். மேலும் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.