Skip to main content

செல்லப்பிராணிகள் கண்காட்சியில் பாரம்பரிய நாட்டின வகை நாய்கள்

Published on 17/06/2018 | Edited on 17/06/2018
sd

 

கோவையில் நடைபெற்ற செல்லப்பிராணிகள் கண்காட்சியில் பாரம்பரிய நாட்டின வகை நாய்களின் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் ஆனைமலை கெனல் கிளப் சார்பில் இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 450 நாய்கள் கலந்து கொண்டன. மேலும் இந்த நாய்கள் கண்காட்சியில் ஜெர்மன் செப்பர்ட், கிரேட் டேன், பாக்ஸர்,  புள் டாக், டால்மேசன், கிரெடவுன், புல் மாஸ்டிப், ஜெர்மன் செப்பர்ட், உட்பட நாயகள் கலந்து கொண்டன. மேலும் இந்த கண்காட்சியில் சென்னையை சேர்ந்த ப்ரீத்தம் பெங்களூர் பகுதியை சேர்ந்த யசோதா மற்றும் மார்ட்டின் நடுவர்களாக உள்ளார்கள். 


இந்திய அளவில் தமிழ்நாட்டில் உள்ள ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை, கன்னி போன்ற வகை நாய்களும் போட்டியில் கலந்து கொண்டு உள்ளன. இந்த கண்காட்சியில் நாய்களின் பற்கள், நடை, உருவ அமைப்பு போன்றவற்றை வைத்து பதக்கம் வழங்க படும் என ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். மேலும் இந்திய நாட்டு நாய் ரகங்களை மற்ற வெளிநாடு நாய்களுக்கு இணையான அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் விரைவில் நம் நாட்டு நாய் ரகங்களும் உலக அளவில் புகழ்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

17 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்கள்; ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் சிகிச்சை 

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
17 people were bitten by rabid dogs in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புக்கோயில் முக்கம் கடைவீதியில் வியாழக்கிழமை(8.2.2024) மாலை வெறி நாய் ஒன்று கடைவீதிக்கு வந்தவர்களை கால்களில் கடித்து குதறியது. நாய் கடித்ததும் ரத்தம் கொட்ட கொட்ட கதறிக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதனையடுத்து சற்று நேரத்திற்குள் தென்நகர் பகுதியில் ஒரு நாய் இதே போல அடுத்தடுத்து பலரை கடித்துவிட்டுச் சென்றுள்ளது. இதனால் கறம்பக்குடி பகுதியே பரபரப்பாகவும் பதைபதைப்பாகவும் இருந்தது. 

இதில் கறம்பக்குடி இந்திரா நகர் பார்த்திபன் (35), புதுப்பட்டி சரவணகுமார் (41), மாரிமுத்து (44), தட்டாவூரணி கௌரி (25), பேராவூரணி கறம்பக்காடு ஓமவயல் சூரியமூர்த்தி (70), வெட்டன்விடுதி வினோத்குமார் (30), ஆலங்குடி லோகநாதன் (47), அங்கன்வாடி சுபாஷ் (15), தென்நகர் அம்பிகா (31), சின்னையன் (63), விஜயராமன் (68), சுக்கிரன்விடுதி சுரேஷ்குமார் (45) உள்பட 17 பேர் காயமடைந்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று காயங்களுக்கும் மருந்துகள் கட்டிய பிறகு 12 பேரை மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலர் தடுப்பூசிகள் மட்டும் போட்டுக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். ஒரே நேரத்தில் ஒரே ஊரில் 17 பேரை நாய்கள் கடித்த சம்பவம் வேதனையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இத்தனை பேரை நாய்கள் கடித்ததால் பொதுமக்கள் கடைவீதிக்கு வரவே பீதியடைந்துள்ளனர். 

இதே போல கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தில் ஞானசேகரன் என்ற விவசாயி தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த 4 ஆட்டுக்குட்டிகளை நாய்கள் கூட்டமாக வந்து கடித்துக் குதறி கொன்று போட்டதைப் பார்த்து விவசாயி கதறி அழுதார்.

தொடர்ந்து நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து ஏராளமான விபத்துகளுக்கு காரணமாவதுடன் கால்நடைகளையும் கடித்துக் கொன்றுவிடுகிறது. மேலும் கறம்பக்குடி போல மனிதர்களையும் கடித்துக் குதறி வருகிறது.

Next Story

நாய் கடித்ததில் படுகாயம்; 4 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

4-year-old girl was admitted to hospital after being bitten by dogs near Manaparai

 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீ.பூசாரிபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான வடிவேல் என்பவரது 4 வயது சிறுமி, தன்னுடைய வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. அப்போது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் சிறுமியைக் கடித்துக் குதறவே சிறுமி‌ சப்தம் போட்டுள்ளார். உடனே குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு பார்த்தபோது வலது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. 

 

இதனையடுத்து உடனடியாகச் சிறுமியை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதும் பொதுமக்களையும்‌ கோழி மற்றும் கால்நடைகளையும் கடித்து மக்கள் பாதிக்கப்படும் சம்பவமும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை இனியும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இதேபோல் சம்பவத்தால் பலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.