Dogs that died en masse ... Police in a series of investigations

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் நேற்று இரவு தொடர்ச்சியாக 18 நாய்கள் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளது. இரவு நேரத்தில் தெருவில் சுற்றித் திரிந்த நாய்கள் ஒவ்வொன்றும் வரிசையாக மயங்கி விழுந்துள்ளது. வாயில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisment

காவல்துறையினரும், கால்நடை மருத்துவரும் வந்து சோதனை செய்ததில் தெருவில் சுற்றித்திரிந்த 16 தெரு நாய்கள் மற்றும் வீட்டில் வளர்த்த நாய்கள் கோழி கழிவுகளில் குருணை மருந்தை வைத்து போட்டுள்ளதை சாப்பிட்டது தெரியவந்துள்ளது. அதை சாப்பிட்ட நாய்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் அப்பகுதியில் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment