Advertisment

பாசமாக வளர்த்த நாய்க்கு மஞ்சள் நீராட்டு விழா

Ulundurpet

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி உ.கீரனூர் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வந்தார். எப்பவும் அதனுடன் கொஞ்சி விளையாடுவதுடன், உள்ளூரில் எங்கு சென்றாலும் அதனை அழைத்துக்கொண்டுதான் செல்வார். வெளியூர் செல்லும்போது யாராவது ஒருவர் தனது நாயை கண்காணிக்க வைத்துவிட்டுத்தான் செல்வார்.

பாசமாக வீட்டில் வளர்த்து வந்த நாய்க்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தியுள்ளார் முருகானந்தம். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு நாயக்கு ஆலம் எடுத்தனர். மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு மற்றும் வரிசை வழங்கபட்டது. நாய்க்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தியதை அந்த ஊரில் சிலர் வியப்புடன் பார்த்தனர்.

Advertisment

function dog villupuram ulundurpet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe