dog kneeling like a human being at Murugan temple

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. கடந்த ஆண்டு இக்கோவிலின் குடமுழுக்கு மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நடைபெற்றது. அதன்படி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இன்று அதே நட்சத்திரம் என்பதால் சிறப்பு வழிபாடு நடைபெற்றது, இதனை ஒட்டி முருகப்பெருமானுக்கு யாகமும் 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.

Advertisment

பின்னர் தீப ஆராதனை நடைபெற்றதையடுத்து முருகன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி ஆலயத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தார். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட பாடல் ஆசிரியர் பா. விஜய் தனது துணைவியாருடன் கலந்து கொண்டார். முன்னதாக 108 சங்காபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நாய் ஒன்று பக்தர்களுடன் பக்தராக அங்கு வந்து சிறிது நேரம் தியானம் செய்வது போல் கண்களை மூடி அமர்ந்து, பின்னர் ஒவ்வொரு சன்னதியாக சென்று மனிதர்கள் போன்று, மண்டியிட்டு சுவாமியை வணங்கியது அங்கு கூடியிருந்த பக்தர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

Advertisment