Advertisment

வெறி நாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு... அச்சத்தில் பூவிருந்தவல்லி பகுதி மக்கள்!

chennai

சென்னையில் வெறி நாய் கடித்து நோய் பாதித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் மோனேஷ் என்ற 7 வயது சிறுவனை அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று கடித்துவிட்டது.இதனையடுத்து வெறிநாய் கடித்ததால் ராபீஸ் தொற்றுக்கு சிறுவன்மோனேஷ் ஆளானான். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த சிறுவன் மோனஷ் சிகிச்சை பலனின்றி தற்பொழுது உயிரிழந்துள்ளார்.

Advertisment

ராபீஸ் தொற்று காரணமாக சிறுவன்உயிரிழந்ததால் சிறுவனின் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை அந்த வெறிநாய் கடித்திருக்கும்நிலையில், சிறுவனின்உயிரிழப்பு செய்தி அப்பகுதி மக்களைஅச்சத்தில் உறைய வைத்துள்ளது.

Chennai chennai corporation dog
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe