Advertisment

9 குட்டிகளை ஈன்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நாய்

g

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நாட்டுக்கல் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி ஹரிஸ். செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அதீத ஆர்வம் கொண்டதால் லசாப்சோ என்ற இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வாங்கி ஜாய் என பெயரிட்டு வளர்த்துள்ளார். தற்போது ஒரே நேரத்தில் 9 குட்டிகளை ஈன்றுள்ளது ஹரீசின் செல்லப் பிராணியான ஜாய்லசாப்சோ இன நாய்கள் பற்றிய தகவல் அறிய இணையத்தில் தேடிய போது இந்த வகை நாய்கள் 3 முதல் 5 குட்டிகள் மட்டுமே ஈனும் என்ற தகவல் அறிந்தவர், அதன் பிறகு தேடிய போது தனது ஜாய் ஈன்றது போல 9 குட்டிகள் வரை எந்த லசாப்சோ இன நாயும் குட்டிகள் ஈன்றதில்லை என்பதை உறுதி செய்த பிறகு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனைக்கான பதிவிற்காக விண்ணப்பித்தார். பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு ஜாய் 9 குட்டிகள் ஈன்றதை சாதனையாக கருதி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்து சான்றிதழும் பதக்கமும் வழங்கியுள்ளனர். ஒரு சிறிய ரக நாய் அதிக குட்டிகளை ஈன்று சாதனைபடைத்துள்ளதை பெருமையாக பேசி வருகின்றனர்.

Advertisment

dog
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe