dog bit a girl in Trichy

சென்னையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் திருச்சியில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

திருச்சி உறையூர் பாத்திமா நகர் பகுதியைச் சேரந்தவர் முகமது ஹிதாயத்துல்லா (வயது37). இவரது மனைவி சல்மா(வயது31), மகள் தல்பியா(வயது7). நேற்று முன்தினம் டியூஷனில் இருந்து தல்பியாவை அழைத்துக்கொண்டு, சல்மா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் எதிர்வீட்டில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த ஜெர்மன் செப்பர்ட் வகை வளர்ப்பு நாய், திடீரென சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடி வந்து, சிறுமி தல்பியாவை கடித்துக் குதறியது.

Advertisment

இதில், உடலில் பல இடங்களில் காயமடைந்த சிறுமி, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், வளர்ப்பு நாயின் உரிமையாளரான தனியார் மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார் மீது உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.