Advertisment

''பீகார் அரசுக்கு உள்ள துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லையா?''- சட்டப்பேரவை வளாகத்தில் தமிமுன் அன்சாரி தர்ணா

இன்று நடந்தசட்டப்பேரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கு எதிராகத்தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனஎதிர்க்கட்சியான திமுககோரிக்கை வைத்தது.

Advertisment

என்.பி.ஆர்தொடர்பாக தமிழக அரசு எழுதியகடிதத்திற்கு மத்திய அரசு பதிலளித்து விட்டதா? எனதிமுக தலைவர் ஸ்டாலின் கேள்விஎழுப்பினார். மேலும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர வேண்டும். போராடி வரும் மக்களுக்குஒரு வாக்குறுதியை அரசு வழங்க வேண்டும் எனவும்ஸ்டாலின் பேசினார்.

Advertisment

publive-image

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதற்கு பதிலளித்து பேசியஅமைச்சர் உதயகுமார், என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு இன்னும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை எனகூறினார்.

என்பிஆருக்குஎதிராகதீர்மானம் வேண்டும் எனநாகைஎம்.எல்.ஏ தமிமுன் அன்சாரிகோரிக்கை வைத்தார்.கோரிக்கையைதமிழக அரசு ஏற்காததால் சட்டமன்ற வளாகத்திலேயே கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்ததமிமுன் அன்சாரி,இது ஒரு சமூகத்திற்கு மட்டுமே நடக்கும்பாதிப்பல்ல.பீகாரில்பாஜக கூட்டணியில் உள்ள அரசு என்பிஆர்க்கு எதிராகதீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில்நீங்கள் ஏன் கொண்டு வர மறுக்கிறீர்கள். பீகார் அரசுக்கு உள்ள துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லையா ? என்றகேள்விக்குஓபிஎஸ், என்பிஆரால் யாருக்கும் பாதிப்பில்லை எனபதிலளித்தார். அது அவரதுநல்லெண்ணத்தின் அடிப்படையினாலான பதில். அஸ்ஸாமில் பாதிக்கப்பட்டவர்களில் இந்துக்களும் உள்ளனர். எனவே இதற்கு எதிராகதீர்மானம் வேண்டும் எனஇங்கேயேதர்ணாவில் ஈடுபட்டேன். ஆனால் போலீசார் அனுமதி இல்லை எனகைது செய்துள்ளனர் என்றார்.

npr Tamimun Ansari Tamilnadu assembly
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe