ஏழு நாட்களாக தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் நடத்திவந்த உண்ணாவிரதப் போராட்டத்தைமுதல்வர் வேண்டுகோளை ஏற்று தற்பொழுது தற்காலிகமாக வாபஸ் வாங்குவதாக சென்னை அரசு மருத்துவமனை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது. கடந்த ஏழு நாட்களாக அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்போது 8-வது நாளாக இன்று காலை போராட்டம் தொடங்கிய நிலையில் தற்போது முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக கைவிடுவதாக சென்னை அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
மேலும் எங்களை கடவுளுக்கு இணையாக மக்கள் பார்ப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.