Skip to main content

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் - நோயாளிகள் பாதிப்பு

Published on 28/07/2018 | Edited on 28/07/2018
Doctors strike - affected patients



தமிழகத்தில் இன்று தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனா்.
 

 

 

              மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்துக்கு இந்தியா மருத்துவ சங்கத்தினா் எதிா்ப்பு தொிவித்துள்ளனா். இதற்கு மத்திய அரசு மருத்துவ சங்கத்தினாிடம் பேச்சு வாா்த்தையும் நடத்தாமல் மருத்துவ ஆணைய சட்டத்தை கொண்டு வருவதில் மும்முரம் காட்டி வருகிறதாம். இதற்கு எதிா்ப்பு  தொிவித்து தனியாா் மருத்துவா்கள் ஒரு நாள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
 

             இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மருத்துவா் சங்க தலைவா் மருத்துவா்  ஜெயலால்,


மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டிருக்கும் தேசிய மருத்துவ ஆணையம் ஜனநாயக மரபிற்கு எதிரானது. இதன் மூலம் தனியாா் மருத்துவ கல்லூாிகளில் நிா்வாக ஓதுக்கீட்டை 15 சதவிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயா்தினால் ஏழை மாணவா்கள் பாதிக்கப்படுவாா்கள். இதனால் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எங்கள் எதிா்பை தொிவித்து தான் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.
 

          இதில் தமிழகத்தில் 4500 தனியாா்  மருத்துவ மனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதே போல் குமாி மாவட்டத்தில் 450 மருத்துவ மனைகளில் 2ஆயிரம் மருத்துவா்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். 
 

 

 

             இந்த போராட்டத்தால் உள் நோயாளிகளுக்கு மட்டும் தான் சிகிட்சை அளிக்கப்பட்டது. அதே போல் வெளி நோயாளிகளான பிரசவம் மற்றும் எமா் ஜென்சி நோயாளிக்கு சிகிட்சை அளிக்ப்படுகிறது என்றாா். 
 

              தனியாா் மருத்துவா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பல மருத்துவ மனைகளில் வெளி நோயாளிகளுக்கு சிகிட்சை அளிக்காமல் அவா்கள் திருப்பி அனுப்ப பட்டாா்கள். இதனால் அந்த நோயாளிகள் பொிதும் அவதி அடைந்தனா். அரசு மருத்துவ மனைகள் வழக்கம் போல் செயல் படுகிறது.

சார்ந்த செய்திகள்