/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/162_33.jpg)
இந்த உலகம் எதனால்யாரால் வாழ்கிறது என்றால், தனக்கென வாழாது பிறருக்கென வாழும் ஒருசிலரால்தான்என மூதோர் கூறியுள்ளனர். தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்தலேபிறப்பின் இன்பம் என்பதை அவ்வப்போது யாரோ செய்யும் சேவைகளின் மூலம் பார்த்திருப்போம். சிவகாசியிலும் அப்படியொரு சேவையில் பலமருத்துவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ஆனால், அது மருத்துவ சேவையல்ல.சேற்றிலும் சகதியிலும் இறங்கி இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக உடலுழைப்பைநல்கிய சேவை அது.
சிவகாசி பெரியகுளம் கண்மாயின் வடமேற்கு கரையில், கழிவுநீர் தேக்கக்குட்டை கரையில்,மியாவாக்கிமுறையில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது, சிவகாசி மருத்துவர்கள் அனைவரது பங்களிப்போடுநடந்தது. அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை என எப்போதும் பரபரப்பாக இயங்கும் மருத்துவர்கள்,ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நடவு செய்து வியப்பில் ஆழ்த்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-ashok_186.jpg)
இச்சேவையில் டாக்டர்களானசுப்புராஜ், ரகுநாதன், கதிரவன், பாலசுப்பிரமணியன், சோலைக்குமார்,ரத்தினம், சண்முகராஜ், ராஜேஷ் தர்க்கர், மணிகண்டன், பரத், சுதா மற்றும் பல பெண் மருத்துவர்கள்முனைப்புடன் ஈடுபட்டனர். பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகளின்போது போட்டோவுக்கு போஸ்கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். சிவகாசி மருத்துவர்களோ, பெரிய அளவில் பணியாளர்களேஇல்லாமல்தாங்களே பணியாளர்களாக மாறி செயல்பட்டனர்.நமது சமுதாயத்தில் சமூக சேவையின் அவசியம் பலவழிகளிலும் வலியுறுத்தப்படுகிறது.
மியாவாக்கி: நகரங்களில் காலியாக இருக்கும் பகுதிகளில் அல்லது வீடுகளின் பின்புறங்களில் உள்ளூர் மரங்களையும் அவற்றின் விதைகளையும் கொண்டு குறுங்காடுகளை உருவாக்குவதே மியாவாக்கி முறையாகும். குறைந்த அளவுள்ள இடத்தில் அதிக மரங்களை நடுவதன் மூலம், சூரிய ஒளியைத் தேடி அவை உயரமாக வளரும் என்பதே இதன் அடிப்படை ஆகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)