thiru1

திருவாரூரில் மாற்றுதிறனாளி பெண்ணுக்கு மருத்துவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி சரிந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய சந்தபேட்டை காமராஜ் தெருவை சோ்ந்தவர் மாற்றுதிறனாளியான தெட்சாணமூர்த்தி. இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்பூலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே போன்று அவரது மனைவி சித்ராவும் மாற்றுத் திறனாளியாக இருக்கிறார். அவர் திருத்துறைப்பூண்டி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு மருத்துவ பணியாளராக பணியாற்றி வருகிறார். அங்கு இவருக்கு சில மருத்துவர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அதற்கு அவர் உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

Advertisment

THIRUCHI SHIVA

இதனால் அந்த மருத்துவர்கள் சித்ராவின் ஊனம் என்பது பொய்யானது என்றும் அவரை மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்றும் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே போல் சித்ரா கணவர் தெட்சாணமூர்த்தியின் ஊனம் குறித்து பரிசோதிக்க வேண்டும் என்றும் புகார் கூறியதால் அவர்களை பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சில மருத்துவர்கள் சித்ராவை அத்துமீறி சோதனை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சித்ராவும், அவரது கணவரும் இத்தனை அவமானத்திற்கு பிறகும் வாழ வேண்டுமா என முடிவெடுத்து தூக்க மாத்திரை தின்றுவிட்டு தங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது என மனுவை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.

Advertisment

அங்கு மயங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இருந்த தம்பதியரை காவல்துறையினர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.