Skip to main content

ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் - அறிவிப்பை வெளியிட்ட பெருநகர மாநகராட்சி!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

doctors and nurses greater chennai corporation

 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன. அதேபோல், சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. 

 

இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி இன்று (28/04/2021) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள, ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கல்வித்தகுதி உள்ளிட்ட அசல் சான்றிதழ்களுடன் 29/04/2021 மற்றும் 30/04/2021 (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) ஆகிய தேதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற உள்ள நேர்காணலில் நேரடியாக கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மருத்துவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 60,000, செவிலியர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 15,000 வழங்கப்படும். இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேருவதற்கான சுயவிருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டவிரோத கருக்கலைப்பு; ஓய்வு பெற்ற பெண் செவிலியர் கைது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
illegal abortion; Retired female nurse arrested

கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவிப்பவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவித்து வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் பலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமதி. இவர் ஓய்வு பெற்ற அரசு செவிலியர் ஆவார். கடத்த ஐந்து ஆண்டுகளாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் பலருக்கு தெரிவித்து வந்த காந்திமதி, இதற்காக 20,000 பெற்றுக் கொண்டு கடந்த 5 வருடங்களாக கருக்கலைப்பிலும் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மருத்துவத்துறை அதிகாரிகள் காவலர்களுடன் அங்கு சென்ற நிலையில், நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மைகள் வெளியே வந்தது. அதனைத் தொடர்ந்து கையும் களவுமாக ஓய்வுபெற்ற செவிலியர் காந்திமதியை போலீசார் கைது செய்தனர்.

Next Story

பல கோடி ரூபாய் வரி பாக்கி; சிக்கிய மத்திய அரசு நிறுவனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
12 crore in tax arrears; Chennai Corporation Notice to Central Govt

கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம்  தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.