doctor prabhdeep kaur tweet coronavirus prevention

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இருப்பினும், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைதாண்டியுள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் காணொளி மூலம் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

doctor prabhdeep kaur tweet coronavirus prevention

இந்நிலையில், கரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரப்தீப் கவுர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவை விட நாம் புத்திசாலிகள் என யாரும் எண்ண வேண்டாம். கரோனா வைரஸுக்கு எதிரான பல்வேறு வழிமுறைகள் தோல்வி அடைந்துவிட்டன. நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள், பானங்கள், பொடிகள் ஆகியவை தோல்வியுற்றன. முகக்கவசம், தனிமனித இடைவெளி, தடுப்பூசி எனநம்பகமான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.