Advertisment

செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்!

 doctor misbehaved with the nurse

சென்னை முகப்பேர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையில், அறுவை சிகிச்சைப் பிரிவில் மருத்துவராக உல்லால் பாண்டுரங்கி என்பவர் பணிபுரிந்து வருகிறார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், வளசரவாக்கத்தில் தங்கி முகப்பேர் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு மருத்துவர் உல்லால் பாண்டுரங்கி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட செவிலியர் திருமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மருத்துவர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவர் உல்லால் பாண்டுரங்கி செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், மருத்துவர் உல்லால் பாண்டுரங்கி தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து உல்லால் பாண்டுரங்கியை தேடிவந்த போலீசார் திருப்பதியில் பதுங்கி இருந்தவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment
police Doctor nurse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe