Skip to main content

டாக்டர் ஜீவானந்தம் காலமானார்! 

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

doctor jeevananatham incident

 

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஜீவானந்தம். இவர் கடந்த 20 வருடங்களாக 'தமிழக பசுமை இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்திவந்தார். மேலும், சுற்றுச்சூழல் இயக்கப் போராளியாகத் திகழ்ந்து வந்தார். அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஒரு மார்க்சிய சிந்தனையாளர், செயற்பாட்டாளர். தந்தை பெரியாரின் கருத்துகள், மகாத்மா காந்தியின் காந்தியத் தத்துவங்களை மார்க்சிய சித்தாந்தத்தில் ஒப்பிட்டு, அதற்கான வாழ்வியல் சூழலை வெளிப்படுத்தியவர். ஏராளமான மருத்துவமனைகள் கல்விக் கூடங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

 

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பலரோடும் இவரின் குடும்பம் மிக நெருக்கமாக இருந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில், இலக்கியப் பேராசான் ஜீவானந்தம், பாலதண்டாயுதம், எம்.கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பல தலைவர்களும் இவரது வீட்டில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். இலக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். பல அறிய வெளிநாட்டு நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் தனி முத்திரை பதித்து வந்தவர் டாக்டர் ஜீவானந்தம். இன்று (02/03/2021) பகல் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக டாக்டர் ஜீவானந்தம் காலமானார். 

 

இவரின் இறப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுவுடைமை இயக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.