Advertisment

பெண் ஊழியருடன் தனிமை... டாக்டர் கைது - புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல்!

df

Advertisment

தூத்துக்குடிமாவட்டத்தின் இளையரசனேந்தலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த குருசாமி (50) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக டாக்டராகப் பணியாற்றி வருகிறார். அந்த நிலையத்தில் சுகாதார ஊழியராகத்தற்காலிகப் பணியிலிருக்கும் இளம் பெண் ஒருவருடன் சில வேளைகளில் தனிமையிலிருந்து வந்திருக்கிறார். இந்த விவரம் அதே மருத்துவமனையில் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிற கோவில்பட்டி பகுதியின் நீலவேணி என்பவருக்குத் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து டாக்டர் அந்த இளம் பெண்ணுடன் தனிமையிலிருப்பதை அவர்களுக்குத் தெரியாமல் தன் செல்லில் வீடியோ எடுத்திருக்கிறார். அதில் இளம் பெண்ணுடன் டாக்டர் இருக்கும் அந்தரங்ககாட்சிகள்பதிவாகி இருந்திருக்கிறது.

இந்தத் தகவலையறிந்த டாக்டர், உன் செல்போனில் உள்ள வீடியோக்களை உடனே அழித்துவிடு. இல்லையென்றால் உன்னைக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் நீல வேணியின் செல் திடீரென்று காணாமல் போயிருக்கிறது. அதன் பின் அவருக்குப் பணியில் பல இடையூறுகளைச் செய்து வந்திருக்கிறார் டாக்டர். அவரின் தொந்தரவு தொடர்ந்து அதிகரித்து மன உளைச்சலில் இருந்த நீலவேணி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் டாக்டர் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

அந்தப் புகாரில் டாக்டர் குருசாமியும் அதே மருத்துவமனையில் தற்காலிக ஊழியராகப் பணிபுரியும் இளம் பெண் ஒருவரும் அறையில் அடிக்கடி தனியாக இருந்திருக்கின்றனர். நாளுக்கு நாள் இந்த தொந்தரவு அதிகரித்ததால் இதனை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று டாக்டர் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச் சம்பவத்தை வீடியோ எடுத்ததாகவும் குறிப்பிட்ட இவர், பிறகு இதையறிந்த டாக்டர் குருசாமி தனது செல்போனைத் திருடி வைத்துக் கொண்டு வீடியோ விஷயங்களை வெளியில் செல்லக் கூடாது சொன்னால் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ள நீலவேணி, தனக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு தன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

விசாரணை நடத்திய கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி நேற்று மாலை டாக்டர் குருசாமியைக் கைது செய்து அவரை கோவில்பட்டி ஜே.எம். – 2 நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தினார். பொது இடத்தில் அவ்வாறு நடந்து கொண்டது குற்றம். டாக்டர் மீது வுமன் ஹராஸ்மெண்ட், தரக்குறைவாகப் பேசுதல் என 294(பி), கொலை மிரட்டல் 501(A) ஆகிய செக்ஷ்ன்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறார் என்றார் கோவில்பட்டி டி.எஸ்.பி.உதயசூரியன்.

Doctor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe