Published on 09/09/2018 | Edited on 09/09/2018

மதுரை சிறை காவல் கண்காணிப்பாளராக உள்ள ஊர்மிளா என்ற பெண் காவல் அதிகாரியிடம் வாட்சப் குரல் பதிவில் மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜ் தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ள மதனகலா என்ற பெண் காவல் அதிகாரிக்கு வாட்சப் குரல் பதிவில் மிரட்டல் விடுத்துள்ளான்.

அந்த வாட்சப் குரல் பதிவில், உங்களுக்கு விஜயசாந்தி என்று நினைப்பா? சினிமா பார்த்து கெட்டுவிட்டீர்கள். உங்க பாஸ்போர்ட் இப்போ என்னிடம் உள்ளது .இன்னொரு முறை இப்படி செய்தால் நீங்க பணிநீக்கம் செய்யப்படுவீர்கள். நான் வாயை திறந்தால் எல்லாரும் ரிமாண்ட் ஆகிருவீர்கள், உங்களுக்கு ஒரு வாய்ப்பு தரேன் இரண்டாவது வாய்ப்பு தர நான் கடவுள் இல்லை களத்தில் இறங்கினேன் என்றால் விபரீதமாகிவிடும் என்று பல தோனிகளில் மிரட்டிய குரல் பதிவு வெளியாகியுள்ளது.