/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ZCfsafsfsdgdhyfh_0.jpg)
பெண்கள்தொடர்பாக மனுநீதியில்கூறிய சில கருத்துகளை, சமூக ஊடகம் வாயிலாக திருமாவளவன் சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இதற்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருமாவளவனின் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் அவரை கண்டித்து, குஷ்பு தலைமையில் இன்று போராட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை தடையை மீறி போராட்டம் நடத்த சிதம்பரம் நோக்கி காரில் சென்ற நடிகை குஷ்புமற்றும் அவருடன் சென்றவர்களை முட்டுக்காடு அருகே ஏ.எஸ்.பிசுந்தரவதனன் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கைதானவர்கள்,கேளம்பாக்கம் அருகே தையூர் எனும் பகுதியில் உள்ள சர்தன் ரெஸ்டாரண்டில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, “நான் கிளம்பி வந்தது பாஜக சார்பாக என்பதைகாட்டிலும்,ஒரு பெண் என்ற முறையில்தான் வந்தேன். தேவையில்லாத விஷயத்தை பற்றி பேசிபெண்களை இழிவு படுத்தியதற்காகஇந்த போராட்டம் நடத்திஇருக்கிறோம்என்ற குஷ்பு, சமஸ்கிருதத்தில் ஒரு இரண்டு வரியை குறிப்பிட்டு இந்த ரெண்டு வரிக்கான அர்த்தம் என்ன தெரியுமா? பெண்கள்எங்கே மதிக்கப்படுகிறார்களோ அங்கு கடவுள் இருப்பார் என்பதுதான் அதற்கு அர்த்தம்.
கடவுள்இருக்கிறாராஇல்லையா? தேர்தல் நேரத்தில்கோயிலுக்கும், சர்ச்சுக்கும், மசூதிக்கும் செல்கிறார்கள். அந்த நேரத்தில் கடவுள் தேவைப்படுகிறார், தற்பொழுது கடவுள் தேவை இல்லையா.3,700 வருஷத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட புத்தகத்தை பற்றி பேசி இழிவுபடுத்துகிறீர்கள்.பிரதமர் நரேந்திர மோடி தெளிவாக சொல்லியிருக்கிறார், இன்றுஜனநாயக ரீதியாக நம் நாட்டில் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் தான் இருக்கிறதுஎன்று.
இதிலிருந்து என்ன சாதிக்க போகிறீர்கள். இந்த கட்சிகள், இந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக பேசுகிறவர்கள் வெளியில் மட்டுமல்ல வீட்டிலும் ஆதரவாக கொள்கையைஆரம்பிக்கவேண்டும். தேவையில்லாத விஷயங்களை, தேவையில்லாத நேரத்தில் பேசியுள்ளார் திருமாவளவன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)