'Do you have water to drink?'' Police net for women

தாகத்திற்குத்தண்ணீர் கேட்பது போல் நடித்து 8 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பத்து பவுன் நகையுடன் ஓட்டம் பிடித்த நான்கு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வீட்டில் சிறுமி ஒருவர் தனியாக இருந்த நிலையில், அங்கு வந்த நான்கு பெண்கள் அச்சிறுமியிடம், தாங்கள் ஜோதிடம் பார்க்கும் பெண்கள் எனத்தெரிவித்துள்ளனர். தங்களுக்கு தாகம் எடுக்கிறது தண்ணீர் கிடைக்குமா எனக் கேட்டுள்ளனர். சிறுமியும் தண்ணீர் எடுத்து வரச் சென்றுள்ளார். அப்பொழுது வீட்டுக்குள் புகுந்த இரண்டு பெண்கள் பீரோவில் இருந்த 8 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 10 பவுன் நகை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பெண்கள் 4 பேரும் குறிப்பிட்ட வீட்டுக்குள் இருந்து பதற்றத்துடன் ஓடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் அந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி நகை மற்றும் பணத்தை திருடிய நான்கு பெண்களைத்தேடி வருகின்றனர். உசிலம்பட்டியில் பட்டப் பகலில் 8 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் 10 பவுன் நகை பெண்களால் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment