'Do you have knowledge?'- actor Jeeva's argument at a press conference

கேரளா திரையுலகில் ஹேமா கமிட்டி தொடர்பான அறிக்கை பூதாகரமாகியுள்ளது. அடுக்கடுக்காக நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகளை புகார்களாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்கு நடிகர் ஜீவா அழைக்கப்பட்டு இருந்தார்.

Advertisment

தொடர்ந்து ஜவுளிக்கடையைத் திறந்து வைத்துவிட்டு அங்குள்ள ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அங்கு வந்த செய்தியாளர்கள் நடிகர் ஜீவாவிடம் கேரளாவில் பூதாகரமாகி வரும் நடிகைகள் பாலியல் புகார் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு 'அது எனக்கு தெரியாது' என்பதைப் போன்ற பதிலைஜீவா தெரிவித்ததாகவும், எல்லா துறைகளிலுமே இதுபோன்ற புகார்கள் இருக்கிறது என்றும், இதற்கு பதில் சொல்லவில்லை'' என்று சொன்னதாக கூறப்படுகிறது.

Advertisment

'நீங்கள் நடிகர் என்பதால் தான் ஹேமா கமிட்டி குறித்து ஒரு கேள்வியை கேட்டோம்' என்று செய்தியாளர் கேட்டதற்கு எழுந்து சென்ற ஜீவா, மீண்டும் திரும்பி வந்து கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவரிடம் ''உனக்கு அறிவு இருக்கா?" என ஒருமையில் பேசியுள்ளார். இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் நடிகர் ஜீவாவை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.