Skip to main content

இவர்களுக்கா ஆட்சி, அதிகாரத்தை தரப்போகுறீர்கள்?- கன்னியாகுமரியில் சீமான் பேச்சு

Published on 07/04/2019 | Edited on 07/04/2019

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும்  வேட்பாளர் ஜெயன்றீன் அவர்களை ஆதரித்து நேற்று மாலை நாகர்கோயில், அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசுகையில்,

 

seeman

 

 

ஏழையாகி விட்டார்கள் மக்கள் 22 ஆண்டுகால விடுதலை பெற்ற இந்தியாவில் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆண்டு இருக்கிறது. ஆகினும் மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்றால் பொறுப்பேற்க வேண்டிய கட்சி காங்கிரஸ், பொறுப்பேற்க வேண்டிய கட்சி பாரதிய ஜனதா. ஆனால் இப்பொழுது வெட்கமில்லாமல் 6000 போடுகிறேன் என்றால் இதே மோடி அவர்களிடம் கேட்போம் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் தருகிறேன் என்று சொல்லி உள்ளீர்களே விவசாயிகள் எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று டெல்லியில் நிர்வாணமாக போராடினார்களே அப்போது ஏறெடுத்து பார்க்கவில்லை. இப்போது இவ்வளவு அக்கறை இருப்பவர் ஏன் அப்போது பார்க்கவில்லை. இந்த ஆறாயிரம் ரூபாயை விவசாயிகளுக்கு கொடுக்கத் திட்டம் தீட்டுகிற மோடி அவர்களே மக்கள் மீது அளப்பரிய பற்றும் பாசமும் வைத்திருக்கிற மோடி அவர்களே ஐந்தாண்டு கால ஆட்சியில் நிதிநிலை அறிக்கையில் இந்த திட்டத்தை கொண்டு வந்து போட்டு முடித்திருக்கலாமே.

 

இந்த மாதம் தேர்தல் போன மாதம் அறிவிப்பு தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக 2000 கொடுங்கள் எனக் கூறுகிறது அரசு. இது ஓட்டுக்கு கொடுத்த காசு நாட்டு மக்களுக்கு சேவை செய்ய கொண்டுவந்த திட்டம் அல்ல அறிவார்ந்தவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

 

 வருடம்  72,000 ஆயிரம் கொடுப்போம் என்கிறார் ராகுல் காந்தி. 57 லட்சம் கோடி நாட்டின் கடன். அடித்தட்டு மக்களின் வரி சுரண்டப்படுகிறது. கல்வியை அனைவருக்கும் சமமாக கொடுக்க இந்த அரசிற்கு வழியில்லை  எல்லாவற்றையும் தனியார்  முதலைகளுக்கு விற்றாகிவிட்டது. 

 

சோனியா காந்தி அவர்களுக்கு புற்றுநோய் என்றால் அமெரிக்காவுக்கு சென்று மருத்துவம் பார்த்துக்கொண்டார். இவ்வளவு ஆண்டுகளாக ஆட்சி செய்த இந்த கட்சி இந்திய குடிமக்களுக்கு மருத்துவைத்தை ஏன்  சரிசமமாக தரவில்லை.

 

இவர்களுக்கா ஆட்சி அதிகாரத்தை தரப் போகிறீர்கள். கச்சத்தீவை மீட்க முடியவில்லை. கொடுத்தது யார் இந்திராகாந்தி அம்மையார் கொடுத்தபோது வேடிக்கை பார்த்து நின்றது திமுக. ஆனால் இன்று ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும்  கச்சத்தீவை மீட்க போராடுவோம் என முதல் முதல் கொடுத்த தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்துக்கொடுத்துள்ளது இந்த இரு கட்சிகளும்.

 

 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவை அங்கம்  கொண்ட ஒரே கட்சி திமுக. 18 ஆண்டுகள் பதவியில் இருந்து செய்ய முடியாத ஒன்றை இப்போது செய்யப் போகிறேன் என்பதை என் மக்கள் எப்படி நம்புகிறார்கள். 

 

 

காமராஜர் சென்னை மெரினா கடற்கரையில் மாநாடு பேசிக்கொண்டிருந்தார் அப்போது மக்களை நோக்கில் பேசுகையில் ''ஏன்  நாம ஊரான் நாட்டில் சோற்றுக்கு கையேந்தனும் அதற்காகவா போராடி சுதந்திரம் பெற்றோம் நம்ம கிட்ட என்ன இருக்கோ அதை சாப்பிட்டு நிம்மதியா படுப்போம்'' என்றார் அதுதான் தற்சார்பு பொருளாதாரம். பிச்சை எடுத்து பிரியாணி சாப்பிடுவதில்லை ராஜா வளர்ச்சி சொந்த வீட்டில் கஞ்சியைக் குடித்துவிட்டு தன்மானத்தோடு வாழ்வதுதான் வளர்ச்சி இதுதான்  காந்தி சொன்ன தற்சார்பு பொருளாதாரம் அன்னை இந்திரா காந்தி  சொன்ன தற்சார்பு பொருளாதாரம்.  

 

பாஜக இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஒரே திட்டம் தான் துறைமுகம் கொண்டு வருவது.  நாங்கள் கேட்பது மீன்பிடித் துறைமுகம் நீங்கள் கொண்டுவருவது சரக்கு பெட்டக ஏற்றுமதி செய்கின்ற துறைமுகம். இந்தத் துறைமுகத்தில் என்ன வேலை நடக்கும் நாங்கள் கேட்டால் ஏற்றுமதி இறக்குமதி செய்கிறோம் என்கிறார்கள். ஒரே கேள்வியைத்தான் நாங்கள் எழுப்புகிறோம் ஏற்றுமதி இறக்குமதி செய்கிறது சரி, எதை ஏற்றுமதி செய்வீர்கள் இறக்குமதி செய்வீர்கள். இதற்கு சரியான பதில் சொல்ல வேண்டும்.

 

இந்த நிலத்தின் வளங்களை ஏற்றுமதி செய்வீர்கள் வெங்காயம் பருப்பு ஆகியவற்றை இறக்குமதி செய்வீர்கள் வேற என்ன செய்வீர்கள். காரை ஏற்றுமதி செய்வார்கள் சோறை இறக்குமதி செய்வார்கள். ஆண்டு  ஒன்றிற்கு 50 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு டன் எடையுள்ள கார் தயாரிக்க 4 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. மூன்று டன் எடை வரை உள்ள கார்கள் தயாரிக்கப்படுகிறது. 4 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் என்பது பத்தாயிரம் மக்கள் குடிநீர் தேவைக்கான தண்ணீர் அள்ளிக்கொண்டுபோய் அந்நிய முதலாளிகள் வியாபரம் செய்கிறான் இந்தநிலை மாற விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் என பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய சின்னத்துடன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நாம் தமிழர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Naam Tamilar Party to introduce candidates and new  Symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். வழக்கம்போல இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'கடலில் கலந்த எண்ணெய்யை மீனவர்களை விட்டு அள்ள வைப்பதா' - சீமான் கண்டனம்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
'Don't keep the fishermen clean  the oil mixed in the sea'-seaman condemned

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு செய்ததில் அதிக அளவு ஃபீனால், கிரீஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு எண்ணூரின் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப்பகுதியில் குறிப்பாக பக்கிங்காம் கால்வாயில் சிபிசிஎல் தொழிற்சாலைக்கு தெற்கு புறத்தில் உள்ள நீர் மாதிரிகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து பகுப்பாய்வு செய்தது. அந்த ஆய்விற்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அதிர்ச்சி தரும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கலந்த எண்ணெய் கலவையில் அதிக அளவில் ஃபீனால் மற்றும் கிரீஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெய்யாக அல்லது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களாக இருக்கலாம் என தெரிய வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் மாதிரிகளை ஆய்வு செய்த பொழுது ஒரு லிட்டருக்கு 48 கிராம் அளவிற்கு ஃபீனால் இருப்பது தெரியவந்துள்ளது. 10 கிராமில் ஒரு கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும், ஒரு லிட்டரில் 728 மில்லி கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கடல் மற்றும் ஆற்றுப்பகுதியில் கலந்திருக்கும் எண்ணெய் கழிவுகள் பல இடங்களில் மீனவர்களை வைத்து அள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மீனவர்களை வைத்து ஆபத்தை ஏற்படுத்தும் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். இது குறித்த அறிவிப்பில், 'சிபிசிஎல் நிறுவனத்தின் தவறால் வெளியேறி கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை மீனவ மக்களை வைத்து அள்ளுவது கண்டனத்திற்குரியது. அவ்வாறு செய்யக்கூடாது. உரிய பாதுகாப்பு கருவிகளுடன், முறையான பயிற்சி பெற்றவர்களை பணியில் ஈடுபடுத்தி கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.