ADVERTISEMENT

தூய்மைக் காவலர்களுக்கு செய் நன்றி விருந்து... இளைஞர்களின் ஈர மனம்

10:29 PM Mar 25, 2020 | kalaimohan

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் ஜல்லிக்கட்டு அமைப்பு என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலமாக பல்வேறு சமூக நலன்களைப் பணியாகவே செய்பவர்கள் பட்டதாரி இளைஞர்கள். மாவட்டத்தின் புளியங்குடி நகரில் மகிழ் உணவகம் என்றதொரு உணவகத்தை அமைத்து மலிவான விலையில் மக்களுக்கு உணவு தயாரித்தும் வழங்குகின்றனர்.

ADVERTISEMENT


உலகம் முழுவதும் கரோனா கோரதாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் 22/03/2020 அன்று மக்களுக்கு சுய ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது., அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த தொழிலாளிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டாலும் காவல்துறை, மருத்துவத்துறை, மற்றும் துப்புரவுத் தொழிலாளிகளுக்கு விடுப்பு வழங்கப்படவில்லை. கரோனா பரவாமல் தடுக்க பெரும் முயற்சிகளை தூய்மைணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்காக பெரும்பாலான இடங்களில் மக்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர். இதில் புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்த மகிழ் உணவகம் என்று பட்டதாரி இளைஞர்களால் நடத்தப்படும் உணவகத்தில் இருந்து தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தூய்மைக்காவலர்களுக்கு செய்நன்றி விருந்து என்று ஏற்பாடு செய்து 100க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினர்.

ADVERTISEMENT


தற்போது கரோனா பீதியில் உலகமிருக்கிறது. அதைத் தடுப்பதற்காகப் பல்வேறு வழிகளில் ஊழியர்கள், காவல்துறையினர், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு நகரின் தடுப்பு பணிகளைச் செய்து வருகின்றனர். உயிர் அச்சமிருந்தும் மக்களுக்காக தன்னலமற்ற சேவையாக நாள் தோறும் உணவையும் பொருட்படுத்தாமல் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். அவர்களுக்குச் செய் நன்றியாக ஒரு நேர உணவை எங்கள் அமைப்பின் மூலம் இயன்ற அளவு கொடுத்து உதவினோம். என்கிறார் இந்த அமைப்பின் பட்டதாரி இளைஞரான சுரேஷ்.

பசித்தவருக்கு உணவு படைப்பீர், தானத்தில் சிறந்தது அன்னதானம் அனைத்து வேதங்களும் இதைத்தான் வெளிப்படுத்துகின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT