Advertisment

வாடிவாசல் திறந்த எங்களுக்கு.. மோடி வாயை திறக்க தெரியாதா? போராட்டக்களத்தில் மாணவர்கள்..!

colleg stu pro

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்தும்., அழுத்தம் கொடுக்க அச்சப்படும் தமிழக அரசை கண்டித்தும் தமிழகம் மட்டுமின்றி கடல்கடந்தும் தமிழர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Advertisment

colleg stu pro 1

இந்த போராட்டத்தில் அனைத்துக் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சமூக நல இயக்கங்கள் மட்டுமின்றி மாணவர்களும், விவசாயிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு இணையாக தனியார் கல்லூரி மாணவ மாணவிகளும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

Advertisment

colleg stu pro 3

மீண்டும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளத்தில் உள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். வாடிவாசலை திறந்த எங்களுக்கு காவிரிக்காக மோடி வாயை திறக்க தெரியாதா? முடியாதா..? காவிரிக்காக மத்திய, மாநில அரசுகளே ராஜினாமா செய்..! போன்ற பதாகைகள் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

cauvery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe