கதச

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

Advertisment

எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வேட்பாளர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்காக நோட்டீஸ் வழங்குதல், காய்கறி வெட்டுதல், டீ மற்றும் புரோட்டா போட்டுக் கொடுத்து, வேட்பாளர்கள் சிலர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்நிலையில் நகரில் வேட்பாளர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸை அனைத்து இடங்களிலும் ஒட்டிவருவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், " அரசு சுவர்களில் நோட்டீஸ் ஒட்டக்கூடாது. நகரதேர்தல் என்ற பெயரில் குப்பைக் காடாக மாற்ற வேண்டாம். அரசு சுவர்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தால் அதை அகற்றிவிட்டு அதற்கான செலவை வேட்பாளரிடமே வசூலிக்க வேண்டும். தனியார் சுவர்களில் அனுமதி பெற்று போஸ்டர் ஒட்டிக்கொள்ளலாம்" என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Advertisment