அமைச்சர் மற்றும் நான் சொல்வதை எடுத்துக்கொள்ள வேண்டாம்”-அண்ணாமலை பேட்டி!

இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தஞ்சை பள்ளி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை, சி.பி. ராதாகிருஷ்ணன், பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜாமற்றும் பாஜக தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதில், “இந்த நிகழ்வுக்கு மாணவியின் பெற்றோரையும், வீடியோவையும் ஆதரமாக எடுத்துக்கொண்டால் டார்ச்சர் கொடுத்ததற்கானமுழு காரணம் மிக தெளிவாகத்தெரியும். அதே போல் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதுதான் இதற்கு முக்கிய காரணம் என்பதும் நமக்கு தெரிய வரும். அதனால் இதை பொதுவான நிலையில் உள்ள சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். நீங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொல்வதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம், நான் சொல்வதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். சிபிஐ வசம் இந்த வழக்கை கொடுப்போம் அவர்கள் உண்மையை வெளியே கொண்டு வரட்டும்” எனத் தெரிவித்தார்.

Annamalai Chennai H Raja
இதையும் படியுங்கள்
Subscribe