முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீடு, சட்டமன்ற விடுதி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்கள் என55 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவுசெய்த அதிகாரிகள், அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை செய்துவருகிறார்கள்.
இந்நிலையில், வேலுமணி மீதான சோதனைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். திமுக அரசு முன்னாள் அமைச்சர்களை பழிவாங்குவதை விட்டுவிட்டு, மக்கள் நலன் சார்ந்த பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளனர்.