BUS

Advertisment

பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ அல்லது சாலையின் நடுவிலோ அரசு பேருந்தை ஓட்டுநர்கள் நிறுத்தக் கூடாது என்ற உத்தரவினைசென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பேருந்து நிறுத்தத்தில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் நிறுத்தத்தை தாண்டி பேருந்துகள் நிறுத்தப்படுவதால் பயணிகள் ஓடிச்சென்று பேருந்தில்ஏறும் சம்பவங்களும், அதனால் ஏற்படும் விபத்து சம்பவங்களும் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.