Skip to main content

கோவிலில் விளக்கேற்றும் உரிமையை பறிக்கக்கூடாது!! - விளக்கேற்றும் போராட்டத்தில் அர்ஜுன் சம்பத் !!

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

 

 

 

கோவில்களில் விளக்கேற்ற விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து கோவிலில் தடையை மீறி இந்து மக்கள் கட்சியினர் விளக்கேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது என அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்து உள்ளார். 

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீவிபத்து குறித்து ஆராய்ந்த விசாரணை கமிஷன், கோவில்களில் விளக்கேற்றவும், கற்பூரம் கொழுத்தவும் பல்வேறு வழிகாட்டு நடைமுறைகளை அறிவுறுத்தியது. 

 

 

 

 

இதையடுத்து கோவில்களில் விளக்கேற்றவும், கற்பூரங்கள் கொழுத்தவும் தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த தடையை கண்டித்து  விளக்கேற்றும் போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஈடுபட்டனர். 

 

 

உக்கடம் லட்சுமி நரசிம்மன் கோவிலில் தடையை மீறி நெய்விளக்குகளை ஏற்றினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், இந்துக்களின் நம்பிக்கையான விளக்கேற்றும் முறைக்கு தடை விதிக்க கூடாது எனவும் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது எனவும் வலியுறுத்தினார். இது குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும், அமைச்சருக்கும் மனு அளிக்க உள்ளதாகவும், உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். 

சார்ந்த செய்திகள்