திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏகஸ்பா என்கிற பகுதியில் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பகுதி முழுவதும் அடித்தட்டு, சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாகும், இந்த பகுதியில் அமைவதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும், அங்கு வாழ முடியாத நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2020-02-09 at 17.46.18.jpeg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அதனையும் மீறி நகராட்சி நிர்வாகம், தங்களுக்கு அங்கு சொந்தமாக இடம்மில்லாத நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, ஆம்பூரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன்லால் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை நகராட்சிக்கு விற்பனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தங்கள் பகுதியில் உள்ள லாலின் இடத்தை நகராட்சிக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், வேறு எதற்காகவாவுது பயன்படுத்திக்கொள்ளுங்கள், வேறு யாருக்காவது விற்பனை செய்யுங்கள், நகராட்சிக்கு விற்பனை செய்யாதீர்கள் என ஏகஸ்பா பகுதி பெண்கள் பலர், லால் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதுப்பற்றி போலீஸாருக்கு தகவல் செல்ல, அவர்கள் வந்து பொதுமக்களை அப்புறப்படுத்தினர். லால் சார்பாக பொதுமக்களிடம் பேசியவர்கள், அவர் இடத்தினை விற்கவில்லை, நகராட்சி நிர்வாகம் தான் வலுக்கட்டாயமாக கேட்கிறது என தகவலை கூறியபின்பு மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றுள்ளனர்.
பொதுமக்களின் எதிர்ப்பால் நான் இடத்தினை விற்பனை செய்ய விரும்பவில்லையென நகராட்சி அதிகாரிகளிடம் லால் சொல்ல, அவரை சமாதானப்படுத்தி இடத்தினை வாங்கும் பணியில் தீவிரமாக உள்ளனர் அதிகாரிகள்.
Follow Us