Skip to main content

பிறந்தநாள் வாழ்த்து சொல்லாதீங்க! சீறிப்பாயும் டிடிவி தினகரன்!

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றத்திற்கு பிறகு டிடிவி தலைமையில் புதிய கட்சி ஆரம்பித்து ஆர்.கே.நகரில் வெற்றிபெற்று. 18 எம்.எல்.ஏ.க்கள் துணையோடு தமிழகம் முழுவதும் தொடர் பொதுகூட்டம் நடத்திக் தமிழக அரசியலில் பெரிய அதிர்வை ஏற்படுத்தின தினகரன் கடந்த சிலநாட்களாக  நீண்ட அமைதியில் இருக்கிறார். அதுவும் செந்தில்பாலாஜி தி.மு.க. செல்கிறார் என்கிற தகவல் தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டுயிருக்கும் நிலையில் டிடிவி தினகரனின் அமைதி அவருடைய கட்சியினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

ttv


கடந்த ஆண்டு டிடிவி தினகரன் தனது 54-வது பிறந்தநாளில் அவர், திருப்பதிக்கு சென்று சிறப்பு பூஜை செய்து விட்டு திருவண்ணாமலைக்கு சென்றவர் பின்பு நேராக. ஆர்.கே.நகர் பிரச்சாரத்தின்போது, மக்களோடு மக்களாக பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். 




இந்த நிலையில் இந்த வருடம் நாளை தினகரனின் 55 வது பிறந்தநாள் 13.12.2018 வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள தன் மாவட்ட செயலாளர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு இந்த முறை என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு சின்ன விளம்பரம் வாழ்த்து என எதுவுமே கூடாது என மிகவும் கண்டிப்புடன் சொல்கிறேன் என்று உத்தரவு போட்டியிருக்கிறார். காரணம் எதையும் சொல்லாமல் இப்படி பிறந்த நாள் கொண்டாட கூடாது என்று சொல்லியிருப்பது இன்னும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 


சமீபத்தில் திருவண்ணாமலை மூக்குபொடி சாமியாரின் தீடிர் மரணம் அவரை மிகவும் பாதித்துள்ளது என்கிறார்கள். அதே போல் தமிழகத்தில் தினகரன் தலையில் 3 வது அணி அமைந்து விடகூடாது என்று பிஜேபி, அ.தி.மு.க. தி.மு.க. அனைத்து கட்சி தலைமையும் திட்டமிட்டு தினகரன் அணிக்கு பெரிய நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த நெருக்கடியில் இருக்கும் கட்சியினருக்கு தன்னுடைய பிறந்தநாளில் ஏதேனும் அறிவிப்பு கொடுப்பார் என்று தொண்டர்கள் நினைத்து கொண்டிருந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் இந்த அறிவிப்பு பெரிய தொண்டர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 



செந்தில்பாலாஜியின் தி.மு.க. இணைப்பை தடுக்க இந்த நிமிடம் வரை டிடிவி முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார் என்கிறார்கள் அவருடைய உள்வட்டம் அறிந்தவர்கள். 

டி.டி.வி.தினகரனின் பிறந்தநாள் அதிர்ச்சி பரிசாக செந்தில்பாலாஜி நாளை தி.மு.க.வில் இணைகிறார் என்று தி.மு.க. தொண்டர்கள் சொல்லிவருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.