சட்டசபையிலுள்ள ஜெ படத்தை அகற்ற உத்தரவிட முடியாது- உயர்நீதிமன்றம்

கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படம் சட்டசபையில் வைக்கப்பட்டது.

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் படம் சட்டசபையில் வைத்திருப்பதைஎதிர்க்கட்சியான திமுக வன்மையாக கண்டித்தது. மேலும் தண்டனை பெற்ற குற்றவாளியானஜெயலலிதா படத்தை அகற்றவேண்டும் என கூறியது.

JAYALALITHA

இதைத்தொடர்ந்துதிமுகவின்சார்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் ஜெ.வின் படத்தை சட்ட சபையிலிருந்து அகற்றவேண்டுமென வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கிற்கான விசாரணை நடந்து வந்தது. இன்று அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதா படம் தொடர்பாக சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிடமுடியாது. எனவே சட்டசபையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படத்தை அகற்ற உத்தரவிட முடியாதுஎனநீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வுஉத்தரவிட்டு திமுகவின்மனுவை தள்ளுபடி செய்தது.

case highcourt jayalalitha
இதையும் படியுங்கள்
Subscribe