Advertisment

இனி இதுபோன்று மனுதாக்கல் செய்யவேண்டாம்... தொகுதியில் கவனம் செலுத்துங்கள்... கார்த்திக் சிதம்பரத்திற்கு நீதிமன்றம் அறிவுரை

நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிஉறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கார்த்திக் சிதம்பரம் இந்தமாத இறுதி மற்றும் அடுத்த மாத தொடக்கத்தில் லண்டன், அமெரிக்கா,ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளதால் இதுதொடர்பாக அனுமதிகோரிஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

Advertisment

court

ஆனால் அவர் வெளிநாடு செல்வதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது உச்சநீதிமன்றம். மேலும் கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் நீதிமன்றத்தில் 10 கோடியை வைப்புத் தொகையாக செலுத்திவிட்டுத்தான் செல்லமுடியும் என உத்தரவிட்ட நிலையில் நான் ஏற்கனவே 10 கோடி ரூபாய் வைப்புத்தொகை நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளேன் அதை விடுவியுங்கள் அதை திரும்ப நீதிமன்றத்தில் மீண்டும்செலுத்திவிட்டு வெளிநாடு செல்கிறேன் என ஒரு தனி மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய் தலைமையிலான அமர்வு ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய் தலைமையிலான சிறப்பு விடுமுறை அமர்வின் முன் மீண்டும்விசாரணைக்கு வந்தது. அதில் இந்த மனுவைஏற்கனவே நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இனி இதில் தலையிட விரும்பவில்லை. நீங்கள் வைப்புத் தொகையை செலுத்திவிட்டு குறிப்பிட்டநாடுகளுக்கு செல்லலாம். இனி இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்யவேண்டாம்.உங்கள் தொகுதில் நீங்கள் கவனத்தை செலுத்துங்கள் என கூறி இந்த மனுவினை தள்ளுபடி செய்தார் ரஞ்சன்.

karthik chidambaram Supreme Court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe