
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 50 சதவீதம் பேருக்கு கூட நிவாரணம் சென்றடையவில்லை.
மேலும், மீதம் உள்ள விவசாயிகளுக்கு அந்த நிவாரணத்தை வழங்க அரசிடம் வலியுறுத்தினால், தோ்தல் நடத்தை விதிமுறையைக் காரணம் காட்டுகிறார்கள். விவசாய கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்த தமிழக அரசு, விவசாயக் கடன், நகைக் கடன் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்தனர். இருந்தபோதிலும் கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு நகைகளைத் திருப்பி தராமல், தோ்தல் நடத்தை விதிமுறையைக் காரணம் காட்டுகிறார்கள்.
மேலும் விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், விலையேற்றம் என்ற பெயரால், அரசு ஒருபக்கம் விலையை உயா்த்தி, எங்களைக் கொலை செய்ய பார்க்கிறார்கள். ஏடிபி உரம் 1,400 ரூபாயிலிருந்து 1,900 ரூபாயாக உயா்த்தப்பட்டுள்ளது. சரியான நிவாரணம் வழங்கப்படவில்லை. எதற்கெடுத்தாலும் தோ்தல் விதிமுறையை முன் வைக்கும் அரசு, விலை உயர்வுக்கு மட்டும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பது தெரியாதா? மத்திய அரசானது விவசாய இடுபொருட்களின் விலையை உற்பத்தி நிறுவனங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.
அவா்களும், தங்கள் விருப்பம் போல ஆண்டுக்கு ஏடிபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலையை உயா்த்தி எங்களைக் கடனாளிகளாக மாற்றுகின்றனா். ஒவ்வொரு மூட்டைக்கும் 500 ரூபாய் உயா்த்தினால் விவசாயிகளின் நிலை என்னவாகும் என்பது தெரியவில்லை.எனவேதோ்தல் ஆணையம் இதற்கு ஒரு தீா்வு காண வேண்டும் என்றும், நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தி, உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க பிரதமா் மோடி முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)