'' Do not impose debt burden on students ... '' - Raja Muthiah College students protest in Chennai!

கடலூர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட கடலூர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தனியார் கல்லூரிக்கு நிகராக கட்டணம் வசூலிப்பதாக அக்கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என 2021 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்ட போதிலும் அரசாணைக்கு பிறகும் அதேபோல் அதிக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisment

இந்த கல்வியாண்டில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிக்கு நிகரான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து ஏராளமான மாணவர்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அமைந்திருக்கும் ராஜாஜி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'அரசுக் கல்லூரி மாணவர்கள் என்பது சொல்லில் மட்டுமே உள்ளது', 'அரசாணை அமலுக்கு வருமா? இல்லை அவலங்கள் தொடருமா?', 'திணிக்காதே திணிக்காதே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் தேவையில்லாத கடன் சுமையை மாணவர்கள் மீது திணிக்காதே...' என்ற பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.