சீர்காழி பகுதியில் சாதிச்சான்று பெறமுடியாமல் உயர்கல்வியைத் தொடர முடியாமல், 110 குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தவிக்கின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து ஐந்தாவது கிலோமீட்டரில் உள்ளது அரசூர் கிராமம். அங்கு ஒதுக்குப்புறமாக ஜெ.ஜெ. நகர் என்கிற பெயரில் 36 வீடுகளில் 110 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
ஆரம்ப காலத்தில் வீதி வீதியாக சென்று, வீடுகளுக்கு வீடு சென்று மேளம் அடித்தும், மாடுகளை கொண்டு வித்தை காட்டி பிழைப்பு நடத்திவந்தனர். காலப்போக்கில் அதில் இருந்துமாறி பொம்மைகள் செய்து விற்பனை செய்வதும், பிளாஸ்டிக் பொருள்களை வாங்கிவந்து விற்கும்பிழைப்பு நடத்துகின்றனர்.
மலை சாதிமக்கள் என்று அழைக்கப்படும் அவர்களுக்கு அரசுசார்பில் இலவச வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. 10 பேருக்குமட்டும் இலவச கான்கிரீட்வீடுகளை கட்டிக்கொடுத்தனர். அந்த வீடுகளும் தற்போது இடிந்துவிழும் நிலையில் இருக்கின்றன.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு அன்றாட வாழ்க்கையைநகர்த்துகின்றனர். அங்குள்ள சிறுவர்கள் 5-ஆம் வகுப்பு வரை அருகில் உள்ள மணலகரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியிலும், திருச்சிற்றம்பலத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியிலும் பயில்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், தொடர்ந்து படிக்க நினைத்தாலும், 12-ஆம் வகுப்புக்குமேல் கல்வியைத் தொடரமுடியாமல் உயர்கல்விக்கு முழுக்கு போட்டுவிடுகின்றனர். அதற்கு காரணம், அவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவிப்பது தான்.
அவர்களுக்கான சாதிச்சான்றை வருவாய் கோட்டாட்சியர் தான் வழங்க வேண்டும். ஆனால், இதுவரை சாதிச்சான்று கிடைக்கவில்லை,கடந்த 2 ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நான்கு பேர் உயர்கல்வியைத் தொடர முடியாமல் தவிக்கின்றனர். உடனே அவர்களுக்கு சாதி சான்று கிடைக்க செய்ய அரசு முன்வரவேண்டும்என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.