
மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் பல இடங்கள் காலியாக உள்ளதால், அந்த இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக் கோரி, மருத்துவர்கள் அரவிந்த் மற்றும் கீதாஞ்சலி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 31 -ஆம் தேதிக்குள் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், காலியிடங்களுக்கு தனியாகக் கலந்தாய்வு நடத்த இயலாது என, அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தகுதியான மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில், மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதிசெய்ய வேண்டாம் என அனைத்துக் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 14 -ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)