Advertisment

''நல்லா இருக்க தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள்' - நடிகர் வடிவேலு பேட்டி!

 'Do not divide Tamil Nadu' - Actor Vadivelu interview!

Advertisment

தமிழ்நாட்டில் கரோனாஇரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கரோனா சூழலை எதிர்கொள்ளமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கலாம் என ஏற்கனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று (14.07.2021) தலைமைச் செயலகத்தில்முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கரோனா நிவாரண நிதியாக 5லட்சம் ரூபாயைவழங்கினார். இந்தச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வடிவேலுவிடம், இனி அதிக படங்கள் நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ''நல்லதே நடக்கும்'' என்றார். மேலும் பேசிய அவர், ''உலகமே உற்றுப் பார்க்கும் அளவிற்கு கரோனாவை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார். அனைவரும் முன்வந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்'' என்றார்.

அதனைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர் ''நல்லா இருக்கிற தமிழ்நாட்டைப் பிரிக்காதீர்கள். தற்போது நடைபெறும் ஸ்டாலினின் ஆட்சியைக் கலைஞர் இருந்து பார்த்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பார். அந்த அளவுக்கு ஆட்சி இருக்கிறது''என்றார்.

Advertisment

அதனையடுத்து ஒன்றிய அரசு என மத்திய அரசை அழைப்பது குறித்த கேள்விக்கு, ''இதற்கு அன்றே முதல்வர் விளக்கமளித்துவிட்டார். உங்களுக்கு மறுபடியும் டவுட் என்றால் அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்'' என அவரது பாணியில் அங்கிருந்துஓடினார்.

coronavirus TNGovernment vadivelu
இதையும் படியுங்கள்
Subscribe