style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக மற்றும்காங்கிரசுடன் கூட்டணி வைக்கயிருப்பதாகவும், நாளை நடக்கவிருக்கும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் இந்த கூட்டணி குறித்து அதிகாரதகவல்கள் வெளியாகும் எனவும்செய்திகள் பரவிய நிலையில், கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர்கள். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இதுஎன கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்த டுவிட்டர் பதிவில்,
மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம் என பதிவிட்டுள்ளார்.