
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று (19.07.2021) தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இந்த தகவலை நம்ப வேண்டாம் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை நடைபெற்றுவருவதாகமருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)