Skip to main content

நீட் தேர்வை பார்த்து பயம் வேண்டாம் நான் இருக்கிறேன்' - டாக்டர் விநாயக் செந்தில்

பிரபல நீட் கோச்சிங் நிறுவனம் ஸ்பீட் மெடிக்கல் இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர் டாக்டர் விநாயக் செந்தில் நீட் தேர்வின் விழிப்புணர்வு குறித்து பேசும்போது.... 'நான் என்னுடைய எல்லா டிகிரியும் சென்னையில்தான் முடித்தேன். எம்பிபிஎஸ் படித்து விட்டு அதற்கு மேற்படிப்பு படிக்க என்ன கஷ்டம் என்பதை நான் நன்றாக அறிவேன். இதை நான் படிக்கிற காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன். அப்போதெல்லாம் முதுநிலைப் பட்டம் படிக்க வேண்டுமென்றால் அதற்கு உண்டான எண்டரன்ஸ் எக்சாம் டெல்லியில்தான் போய் எழுத வேண்டும். பொதுவாக இந்த பரிட்சைக்கு தமிழகத்தில் இருந்து யாரும் செல்ல மாட்டார்கள். அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன். நாம் ஏன் இந்த மாதிரியான பரீட்சைகளை பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்று. உடனே முடிவு செய்து இதற்கு உண்டான பயிற்சியை கொடுப்பதற்காக இந்த ஸ்பீட் இன்ஸ்டிடியூட் ட்ரைனிங் சென்டரை 2002ல் ஆரம்பித்தேன். அந்த வருடம் இந்த திறனாய்வு மையத்தில் 250 மாணவர்கள் பயின்றனர். அவர்களை வலுக்கட்டாயமாக பிஜி எண்டரன்ஸ் எக்ஸாமை டெல்லிக்கு அழைத்து சென்றேன். பிறகு அனைவரும் எழுதிவிட்டு சென்னை திரும்பினோம். சென்னை வந்து இறங்கிய உடன் நாங்கள் யாரும் எதிர்பாராத விதமாக வந்திருந்த 250 பெயருடைய குடும்பமும் எங்களை வரவேற்கக் காத்திருந்தது. 

 

 Do not be afraid to neet exam

 

ஏனென்றால் அந்தப் பரீட்சையில் முதல் ரேங்க் எடுத்தது இந்த ஸ்பீட் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்தான். அதுமட்டுமில்லாமல் மூன்றாவது ரேங்க், ஏழாவது ரேங்க், ஒன்பதாவது ரேங்க் என எங்களிடம் மொத்தம் ஏழு முதன்மை ரேங்குகள் இருந்தது. நான் அனைவரிடமும் ஒன்றே ஒன்றுதான் சொன்னேன் இந்த பரிட்சையை பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்து யாரும் எழுத செல்ல மாட்டார்கள் நீங்கள் எல்லாம் எழுதியதே முதலில் எனக்கு பெருமை தான் எனக்கு அதுவே போதும் என்று சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தினேன். மேலும் அந்த வருடம் பரிட்சை எழுதிய 250 பேரில் 240 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். மீதமிருந்த 10 பேர் அடுத்த வருடம் எழுதி தேர்ச்சி பெற்றனர். இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் இதேபோல்தான் சில வருடங்களுக்கு முன்பு நீட் தேர்வும் இருந்தது. அதை நாம் கடந்து வந்து இப்போது எழுதவில்லையா. காலம் மாறுவதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பொதுவாகவே நீட் தேர்வு என்றால் பலருக்கு ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன. நான் படித்தது மெட்ரிகுலேசன் அல்லது சிபிஎஸ்சி. இதில் நான் தேர்ச்சி பெறுவேனா, என்னால் முடியுமா, அதற்கு நான் சரியாக வருவேனா என்று மாணவர்களிடையே பயமும், பதட்டமும், கேள்வியும் நிறைந்து காணப்படுகிறது. 

 

 Do not be afraid to neet examவருடத்திற்கு தமிழகத்தில் மொத்தம் 3500 மருத்துவ சீட் வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் 65 ஆயிரம் சீட்டு வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் கொடுக்கும் 3500 சீட் நீட் தேர்வு மூலம் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தியா முழுவதிலும் உள்ள 65000 சீட்டில் 15 சதவீதம் அதாவது கிட்டத்தட்ட 9500 சீட் இந்திய பொது கல்வி முறையின் படி வழங்கப்படுகிறது. இந்த பொதுப் பிரிவில் உள்ள 9500 சீட்டுகளில் அதிகப்படியாக தமிழகத்தில் உள்ள மாணவர்கள் எப்படி பெறுவது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாங்கள் தற்போது காஞ்சிபுரம் மற்றும் மாங்காடு பகுதிகளில் இரண்டு ஸ்பீட் இன்ஸ்டிட்யூட் நடத்தி வருகிறோம். அதில் மொத்தம் 300 மாணவர்கள் பயில்கிறார்கள். அவர்களில் பலர் 12 ஆம் வகுப்பில் கம்மியான மார்க் வாங்கி தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களுக்கு நாங்கள் அங்கேயே தங்கி பயிலும் ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறோம். இதனால் அவர்களின் மனநிலை எங்கும் சிதறாமல் படிப்பிலேயே முழு கவனம் இருப்பதால் நல்ல மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற நேருகிறது. எங்களது கல்வித்தரம் நான் முன்கூட்டி சொன்ன கணக்கின் அடிப்படையில் எளிமையான நடைமுறையோடு வழங்கப்படுகிறது. இதே சென்னையிலும் எங்களுக்கு உள்ள இன்ஸ்டியூட்டில் பயிலும் மாணவர்களை விட தங்கிப் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். 

 அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு பள்ளிகள் மற்றும் தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளுடன் இந்த ஸ்பீட் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்து மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு சேட்டிலைட் வகுப்புகள் மூலமாக நாங்கள் பாடம் எடுத்து நீட் தேர்வில் எளிதாக மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கிறோம். அதுமட்டுமில்லாமல் என் தனிப்பட்ட முறையிலும், நம் ஸ்பீட் இன்ஸ்டிடியூட் மூலமாகவும் இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் டாக்டர்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம். எனவே நான் மாணவர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் இந்த வருடம் உங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம் அடுத்த வருடம் கண்டிப்பாக சீட் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சீட் தவிர்க்கப்படவில்லை, தாமதமாகியுள்ளது. அவ்வளவுதான். இது முடிவல்ல. எனவே கவலை வேண்டாம் முயற்சி செய்வோம், முன்னேறுவோம்' என்றார்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்